Saturday 4th of May 2024 03:09:03 AM GMT

LANGUAGE - TAMIL
.
பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு; நான்கு வான்கதவுகள் திறப்பு - மக்களுக்கு அவதான அறிவிப்பு!

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு; நான்கு வான்கதவுகள் திறப்பு - மக்களுக்கு அவதான அறிவிப்பு!


பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை அடைந்துள்ளதால், அதன் இரு வான் கதவுகள் ஒரு அடிக்கும், இரு வான் கதவுகள் 9 அங்குலத்திற்கும் ஆக நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5, 6, 4, 2, 1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

அத்துடன், முகத்தான்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 9 அங்குலமாகவும், மருதமடுக்குளம் 12 அடி 8 அங்குலமாகவும், இராசேந்திரங்குளம் 12.6 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ள நிலையில் இக் குளங்களும் வான் பாய்ந்து வருகின்றன. இதனால் அதன் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்களும் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், ஈரப்பெரியகுளத்தின் நீர்மட்டமும் 13 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் அக் குளமும் வான் பாயும் நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE